Stories

சோறு முக்கியம் அமைச்சரே


அண்ணாவைப் பற்றிய இந்த 10 சுவாரஸ்யங்கள் தெரியுமா..? | 10 Interesting bits  about C.N.annadurai!

 

பேரறிஞர் அண்ணாவை அறிந்தபிறகு, நவீன இலக்கியத்தின் அடி நீரோட்ட அரசியலும் புரியவந்தது எனக்கு.

படைப்பாற்றலும் அறிவுத்திறமும் கொண்ட அண்ணா மைய நீரோட்டச் சமூகத்தின் தலைவனாக இருந்தார்.

இருளிலிருந்து மக்களை அகழ்ந்தெடுத்து எந்த ஒளியைப் பாய்ச்சுவதென தெளிவு பெற்றிருந்தார்.

பெரியார் அண்னாவின் ஊடல்கள் சுவாரசியமானவை. அறிய அறிய...

Continue Reading...

‘குட்டி ரேவதி கவிதைகள்’ - மூன்றாவது தொகுதியில் எந்தெந்தக் கவிதைத் தொகுப்புகள்?


 

1. மீண்டும் கண்டெடுக்கப்படும்

2. புலியும் புலிபோலாகிய புலியும்

3. திராவிட அரசி

4. பெண்ணுடலென்னும் தொன்மம்

5. நுழைவாயிலென ஒரு நிலைக்கண்ணாடி

6. மூவாயிரமாண்டு காதல் மொழிகள்

7. நாம் சந்தித்து ஒரு நூற்றாண்டு இருக்கலாம்

 

இந்த ஏழு நூல்களுமே மூன்றாவது தொகுதியாகின்றன. எவ்வளவு பரபரப்பான காலமாக இருந்தாலும், முடக்கமான காலமாக...

Continue Reading...

நீயா நானா


 

நீயா நானா விவாதம் பரந்த கவனத்தைப் பெற்றுள்ளது.

என்னைப் பொறுத்தவரை, குடும்பம் பற்றிய சமன்பாடுகளில் இங்கே நீயும் இல்லை, நானும் இல்லை.

தொடர்ந்து இருபது ஆண்டுகள் உரையாடி உரையாடிப் பழகியதில், குடும்பத்தின் சுவர்களுக்குள் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை

ஆணியமும் இல்லை, பெண்ணியமும் இல்லை. தட்டையாக இன்னும் எத்தனையோ நாம் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

அதாவது, ஆண் இதையெல்லாம் செய்வாரா, பெண்...

Continue Reading...

இளைய தலைமுறை


 

 

 

சமீபத்தில், ஹொராசியோ கிரோகா ((Horacio Quiroga) என்ற உருகுவே எழுத்தாளரின் சிறுகதைகளை வாசிக்கத் தொடங்கினேன். சிறுகதை எழுத விரும்புபவர்கள் வாசிக்க வேண்டிய எழுத்தாளர்.  காடுகளையும் காட்டு விலங்குகளையும் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.  அவர் கதைகளை வாசித்து அப்படியே அவருடைய வாழ்க்கை வரலாறு வாசிக்கத் தொடங்கினேன். அவரைப் பற்றிய தனித்துவம் என்னவென்றால் காட்டு வாழ்க்கை மீது மிகுந்த நாட்டம்...

Continue Reading...

ரயில் கனவுகள்


 

 

ஒரு காலத்தில் தொடர்ந்து ரயிலைப் பற்றிய அதிதீவிர கற்பனை கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தேன். அதிகமான ரயில் கவிதைகளை எழுதியிருக்கிறேன். ரயிலில் நீள் தூரம் பயணிப்பது இன்றும் மிக விருப்பமான ஒன்று. சமீபமாய்க் கூட, தொடர்ந்து ‘ரயில் கனவுகள்’ வரும் படியாக பதினைந்து நாட்களுக்கும் மேல் பயணத்தில் இருந்திருக்கிறேன். இந்தத் தொடர் ரயில் பயணங்கள் வழியாக,  ஒரு ரயிலில் எப்படி வசதியாகப் பயணிப்பது என்பது பற்றிய அடிப்படை அறிவைக்...

Continue Reading...

இருள்


 

திருச்சி நோக்கிச் செல்லும் காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தேன். இருள் என்றால் அப்படி ஒரு இருள். என் இருப்பை மட்டுமே உணரமுடிந்த இருள்.

காரில் நிரம்பிப் பெருகி வெளியெங்கும் பரவி வானளவு நிறைந்திருந்த இருள், பாய்மமாகியது. ஓட்டுநரும் இருளில் கருப்புச் சித்திரமாகியிருக்க, வாகனத்தின் முன் காணும் சாலையில் விளக்குகள் ஓடி ஓடி சாலையை எட்டின. எங்கெங்கும் இருளின் பாய்மத்தில் தானும் இல்லாது போகையில் நிறைந்த இன்பம் பரவிப்பாய, அலைபேசியை அணைத்தேன்....

Continue Reading...

பகை


 

கடந்த பதினைந்து நாட்களில், ஒரு பத்து பெண்களின் வாழ்க்கை கதைகளையேனும் கேட்டிருப்பேன். ரயிலில் செல்கையில், ரயில் நிலையத்தில் காத்திருக்கையில், உறவினர் வீட்டிற்குச் செல்கையில், விடுதியில் தங்கியிருக்கையில், தெருவில் நடந்து செல்கையில் என இதற்கு முன் முகம் காணா, முகம் அறிந்த வெவ்வேறு பெண்களின் கதைகள். அவர்களே வந்து பகிர்கிறார்கள். எந்தச் சினிமாவிலும் இடம்பெறாத கதைக்களங்கள். தம் வாழ்வைப் பகுத்துப் பகுத்து அறிந்து சொல்லும் பெண்களின் வாழ்க்கை கதைகள்.

Continue Reading...

போல


 

பாடகர் பம்பா பாக்யாவின் மரணம் மட்டுமன்று, இதுபோன்ற இளைய கலைஞர்கள், திறனாளிகள் தொடர்ந்து ஒவ்வொருவராய் சட்டென்று மரித்துப்போவது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. சில நாட்களுக்கு முன், வாழ்க்கை ஒரு நொடியின் குமிழ் என்று ஒரு பதிவை எழுதி வைத்தேன். இம்மாதிரியான கலைஞர்கள் மறைந்து போகும் போது, நம் வாழ்விற்குத் தம் கலை வழியாக, திறன் மூலமாக அழகு சேர்த்த அந்த அழகும், நம் வாழ்வின் ஒரு பகுதியும் கூடத் தொலைந்து போகிறது. நம் எல்லோரின் வாழ்வும் நல்வழியிலோ,  கேடான...

Continue Reading...

தமிழ்நாடு எத்துணை அழகுடைத்து!


 

புகைப்படம்: திருச்சி அருகே பனிபடர்ந்த இன்றைய காலை

 

 

பயணக்கட்டுரை நூல் எழுதவேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆசை. ஆனால், வாழ்க்கையில் தினம் தினம் பயணங்கள் அமையும் போது பயணங்களை அனுபவிப்பது விடுத்து எப்படி எழுதிக்கொண்டிருப்பது. பெரும்பாலான நேரங்களில் சூழலைக் கவனிப்பதும், நிலக்காட்சிகளை ரசிப்பதும் என ஒரு தீரா வேட்கையே பயணங்களுக்கு இழுத்துச் செல்கிறது.  நான் அறிந்ததில்,...

Continue Reading...

ஒவ்வொரு நொடியும் ஒரு குமிழ்


 

 

ஒவ்வொரு நொடியும் குமிழ் போல ஒரு வாழ்க்கைமுறை. எல்லோரின் வாழ்க்கையும் ஒரு நொடி முள் மீது, நொடி நொடியாக நகர்வது போல் தான் இருக்கிறது என்பதை எல்லோரின் வாழ்க்கையையும் பார்க்கும் போது தோன்றுவது.  தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் குமிழுக்குள் இருப்பதை உணரமுடியுமா என்று தெரியவில்லை. ஒரு தனிமையின் பலூனுக்குள் இருப்பது போல் தோன்றலாம். பொட் பொட்டென்று சுற்றிலும் யார் யாரோ மரணித்துப்போவதைப் பார்க்கையில் வாழ்க்கையின் நிலையிலா தன்மை இன்னும் வீறு கொள்கிறது.

உண்ணும் உணவின் தன்மை,...

Continue Reading...

திருவனந்தபுரம் ஆவணப்பட, குறும்படத் திரைப்படவிழாவில் ஒரு நாள்!


வாழ்நாளில் இதுவரை நூற்றுக்கணக்கான திரைப்படவிழாக்களில் பங்கெடுத்திருக்கிறேன். திரைப்படவிழா தொடங்கும் முன் சென்று முடிந்து எல்லா அரங்குகளும் வெற்றிடமாகும் வரை தங்கியிருந்து கூடத்திரும்பியிருக்கிறேன்.என்றாலும் மிகக் குறைவான நேரமே கழிக்கும் படியான ஒரு பரபரப்பான சமயத்தில் திருவனந்தபுரத்தில் கேரளாவின் 14-வது சர்வதேச ஆவணப்பட குறும்பட விழாவில் ஒரு நாளே பங்கெடுத்துக் கொண்டு திரும்பினேன்.

திரைப்பட விழாக்களின் தன்மைகள் நிறைய மாறியிருக்கின்றன....

Continue Reading...

உருமாற்றம்


நான் உருமாறிவிட்டேன்

காலங்களின் உருக்குலைந்த எழில்

பூமியைச் சுற்றி வருவது போல

Continue Reading...

சென்னையில் குறைபாடுகள் அதிகம்!


சென்னை மாநகரம், மாயம் நிகழ்த்தும் நகரம் தான்.

 

 

சென்னையின் வலிமையைக் கொண்டாடி இதற்கும் முன்னும் எவ்வளவோ எழுதியிருக்கிறேன். வானொலியில் நிறைய முறை பேசியிருக்கிறேன். பெண்களை வளர்த்துவிடும் நகரம். சிறகுகளைக் கிளைக்க விடும் நகரம். வந்தவரை வாழவைக்கும் நகரம். ஒவ்வொருவரின் ஆளுமையையும் காட்டிக்கொடுக்கும் நகரம். ஆனால்,  அன்றாடம் வாழும் ஒருத்தியாக, சென்னையில்...

Continue Reading...

ஆண்களுக்கு அடக்கம் அவசியம்!


 

தேஜஸ் ரயில். சென்னையிலிருந்து மதுரை செல்வது.  காலை ஆறு மணிக்குக் கிளம்பினால்  9.55க்கெல்லாம்  திருச்சிக்கு வந்துவிடும். தனியார் மயமானது என்பதை எல்லாவகைகளிலும் நிறுவுகிறார்கள். வேகம், உணவு இவையெல்லாம் ஒரு விமானத்தில் போல கவனிப்பு. இவற்றையெல்லாம் இந்திய ரயில்வே கொண்டுவந்தாலும் வண்டிகள் வேகமாக ஓடும், உணவும் ருசிக்கும். ஆனால், நமக்கெல்லாம் நாட்டுப்பற்று கொஞ்சம் குறைவு தான்.

நாற்காலி அமைப்பு இருக்கைகள் என்பதால், ஏறி இறங்குவதற்குள் ஒரு புத்தகத்தை...

Continue Reading...

95 வயது நண்பர்


மீண்டும் அந்த 95 வயது நண்பரைச் சந்தித்தேன்.   இந்திய ஆட்சிப்பணியிலிருந்து ஓய்வு பெற்று தன் முதுமையையெல்லாம் கடந்து இளமையை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கும் எஸ். பி. ஆம்புரோஸ் அவர்கள். வாழ்வின் மேலெழுந்து வரும் நினைவுகளையெல்லாம் தொகுத்து, “Brief Memoirs”, என்ற நூலையும்  எழுதிக் கடந்த மாதம் வெளியிட்டிருக்கிறார். சாதனை தான்.    

Continue Reading...

மூவர்ணக்கொடியும் அசோகச்சக்கரமும் நால்வர்ணதேசமும்


 

 

சுதந்திரம் என்ற சொல் யாருக்குத்தான் பிடிக்காது. சொல் என்ற அளவில் எல்லோருக்கும் உகந்ததே. ஆனால், செயல்படுத்திப் பாருங்களேன், எவ்வளவு எதிர்வினை வருகிறதென்று. யாருமே சுதந்திரத்துடன் இல்லை.

 

மூவர்ணமும், அசோகச்சக்கரமும் என்ன விளக்குகின்றன என்பதை நாம் நம் சிந்தனையில் ஏற்றிக்கொள்ளாமல் இவற்றைக் கொடியாக ஏற்றி என்ன பயன். பொது நீர்ச்சேமிப்பிலிருந்து தாகத்திற்கு நீர் எடுத்துக்குடித்ததற்காக, சிறுவன் ஒருவன் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறான். இன்றும்...

Continue Reading...

தறிகெடாத மனோவேகம்


 

 

ஏற்கெனவே, தொலைக்காட்சி பார்ப்பதில்லை, செய்தித்தாள் வாசிப்பதில்லை. அன்றாடச் செய்திகள் தொடர்பான எதையுமே பின்பற்றுவதில்லை.

செய்திகள் அவை தானாக வந்து காதில் சேரட்டும், மனதைத் தொடட்டும் என்று பேசாமல் இருந்து விடுகிறேன். எப்படியும் நமக்குத் தேவையானவை நம்மைத் தோள் குலுக்கி

உலுக்கிவிடுகின்றன, நிலைகுலையச் செய்துவிடுகின்றன. அத்தனை ஊடகப்பின்னல்கள் நம்மைச் சுற்றி. என்றாலும் என் உளவியல் நண்பர், இன்னும் மெதுவாகச் செயல்படுங்கள், உங்கள் மனோவேகத்தைக்...

Continue Reading...

எழுத்தே கத்தி!


 

சாத்தானின் செய்யுள்கள்”, எழுதிய சல்மான் ருஷ்டி, நியூயார்க்கில் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். ஓர் எழுத்தாளர் தன் எழுத்துக்களுக்காகக் குத்தப்பட்டிருக்கிறார் என்றால் எழுத்து என்பது எத்தகைய ஆயுதம் பாருங்கள்.

நம் உலகில் சக எழுத்தாளர்களே பல முறை எழுத்தைக் கத்தியாக உபயோகப்படுத்துவதும், கத்தியை எழுத்தாகப் பயன்படுத்துவதும் வழக்கம் தான்.

எழுத்தாளன் மீது கத்தியெறிதல் என்பது நவீன வாழ்விலும் தொடர்வது.

என்றாலும் சல்மான் ருஷ்டியின் வாழ்க்கையில் கத்தி என்பது படிமமாகவே இருக்கிறது என்று சொல்லவேண்டும்....

Continue Reading...

Rugged ஆண்


 

 

 

நான் அறிந்தவரை

ரக்கட் ஆண் பின்னொரு நாள் சாக்லேட் பாய் ஆகிவிடுகிறார்

சாக்லேட் பாயோ அகத்தில் அழுக்காய் இருக்கிறார்

கரடு முரடு நன்றா மென்மைத் தன்மை நன்றா

அடையாளத்தில் நன்மை இல்லை

வெள்ளையரும் பொய் கறுப்பரும் பொய்

நீதிமான் வெங்காயமாய் இருக்கிறார்

Continue Reading...

அழகின் ஒரு பகுதி


கொரோனா உலகடங்கல் காலத்தில் ஒரு குறும்படம் எடுக்கவேண்டியிருந்தது. அதிலும் சவால் என்னவென்றால் ஒரு ஐஃபோனிலேயே முழுப்படத்தையும் எடுத்துத்தரவேண்டும். உலகளாவீய நவீனத்தரத்தில் தொழில் நுட்பத்திலும் கருப்பொருளிலும் கதைக்களத்திலும் இருக்கவேண்டும் என்பன கூடுதல் சவால்கள்.  “விரல்கள்”, என்ற என்னுடைய சிறுகதைத்தொகுப்பில் இடம்பெற்றிருந்த ‘அழகின் ஒரு பகுதி’, என்ற கதையையே குறுக்கி இச்சவால்களுக்கு உடன்படுத்தினேன். சுவையான அனுபவம். கலை தோய்ந்த அனுபவம். இது போட்டிக்கு அழைக்கப்பட்ட பின்னணியெல்லாம் இப்பொழுதில் பதியக்...

Continue Reading...

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi