Article

தற்காப்பு மருத்துவம்


நண்பர்களே, வணக்கம். இன்னும் கொரோனாவிற்கு எதிர்ப்பு மருந்து என்று ஒன்று இல்லை என்றே கொள்வோம். டெங்கு காலத்திலும் சிக்குன் குன்யா காலத்திலும் கடைபிடித்த எளிய தடுப்பு மருந்துகள் கொரோனாவிற்குப் பொருந்தாது என்றும் வைத்துக்கொள்வோம். என்றாலும், தொடரும் எச்சரிக்கைகளை முன்வைத்தும், ஏற்கெனவே இக்கட்டான நோய்நெருக்கடிக் காலங்களிலும் துணை நின்ற சித்த மருந்தையே ஒரு சித்தமருத்துவராக இங்கு முன் வைக்கிறேன். என் சக மருத்துவர்களும் பொதுவெளிகளில் இதைக் குறிப்பிட்டு துல்லியமாகத் தொடர்ந்து பேசிவருகின்றனர்.

நாம் இரண்டு வகையான விடயங்களைக் கடைப்பிடிக்கலாம்....

Continue Reading...

அநாகரிகம் நிறைந்த புகைப்படம்


இந்தப்புகைப்படம் மனித அநாகரிகத்தின் உச்சம். ஆனால், நண்பர்களே இதற்கு முன்பும் இது போல் நடந்து கொண்டு தான் இருந்திருக்கிறது. அன்று ஒரு நிகழ்விற்காக, நாம் கொந்தளிந்தோம், குமுறினோம். இன்றும், இப்படியான ஒரு சம்பவத்திற்காக நாம் புழுங்கிப் போகிறோம். நாளையும் இப்படி ஒன்று நடக்கும். நம்மால் எல்லாவற்றிற்கும் குமுறித்தான் போக முடிகிறது. எதையும் மாற்ற முடியவில்லை.

இதற்குக் காரணமாக நான் கருதுவது, நம் சமூக வரலாற்றை முழுமையாக நாம் அறிந்திருக்காதது தான். ஒருமித்த எழுச்சியும் போராட்டமுமாக இல்லாமல் அங்கும் இங்கும் அப்பொழுதும் இப்பொழுதுமாக வெடிப்பதற்குக்...

Continue Reading...

தனிமை தனிமை


தனிமை தனிமை தனிமையோ தனிமை தனிமைக்கெல்லாம் தனிமை / கொரோனா

 

அமெரிக்காவிலிருந்து தோழி ஒருவர் அழைத்திருந்தார். ‘குவாரண்டைன், சலிப்பா இருக்கு, தோழி. என்னையே என்னால தாங்கிக்கமுடியல’, என்றார். நான் சொன்னேன், ‘தன்னையே தன்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை என்றால், தனக்குத்தானே இவ்வளவு சலிப்பான ஒருவராக இருக்கிறோம் என்றால், இப்படியான ஒருவரைத்தானே சமூகம் இவ்வளவு காலம் தாங்கிக்கொண்டது. சமூகத்திற்கு நம்மைத் தாங்கிக்கொள்வது எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும்!’, என்றேன் நகைச்சுவையாக. ‘உண்மை தான்’,...

Continue Reading...

அரசியல் சிறைவாசிகளை விடுதலை செய்!


தமிழக அரசே,

கரோனா 19-என்ற தொற்றுநோய் நாடு முழுவதும் பொது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் தீவிரமாக பரவி, 21 நாட்கள் முழுஅடைப்பு என அரசாங்கம் அறிவிக்கின்ற சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய சூழலில் நாடு முழுவதும் சிறைகளில் அதிக கூட்டமாக சிறைவாசிகள் நிறைந்து கிடப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விசயமாக உள்ளது. இந்திய நீதித்துறை அறிக்கை 2019ன் படி சிறையில் தங்கும் சிறைவாசிகளின் சராசரி எண்ணிக்கை 114 சதவீதமாக உள்ளது. சராசரியான எண்ணிக்கை இவ்வாறு இருப்பினும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இது வெவ்வேறானதாக இருக்கிறது.

சாதாரணமாகவே சிறை போன்ற...

Continue Reading...

கியூபாவை முன் வைத்து


கியூபாவை முன் வைத்து: இங்கேயும் வேண்டும் ஒரு மருத்துவப்புரட்சி!

கடந்த இரண்டு நாட்களாக, கியூபாவில் நிகழ்ந்த அறுபது ஆண்டு கால மருத்துவப்புரட்சி பற்றி தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஃபிடல் காஸ்ட்ரோவும் சேகுவேராவும் சேர்ந்து நிகழ்த்தியது என்று நாம் ஏற்கெனவே அறிந்திருந்தாலும், 1959 - ல் இத்திட்டத்தை வடிவமைக்கும் போது, அறுபது ஆண்டுகள் தாண்டியும் வலுவான புரட்சியாக, இயக்கமாக, திட்டமாக அது புழக்கத்தில் இருந்து வருவதாய் அதை உருவாக்குதல் என்பது சாதாரண விடயம் அன்று.

எதிர்காலத்தையும், தம்...

Continue Reading...

கொரோனா காலம்


எந்த ஒரு மனிதனும்
ஒரு முறை கால் வைத்த நதியில்
மீண்டும் கால் வைக்க முடியாது
என்றார், ஹீராக்ளீட்டஸ்
(கி.பி. 544 - 483)
எல்லோரும் இதை ஒரு விடுமுறை, இதுவும் கடந்து போகும், மீண்டும் நாம் அந்தப்பழைய வாழ்விற்குச் செல்வோம் என்று நம்புகிறோம். ஆனால், அது சாத்தியமில்லை என்பது போல அழகிய வனவிலங்குகளும் பறவைகளும் நாம் ஒரு காலத்தில் நடந்து கொண்டிருந்த சாலைகளுக்கு வந்துவிட்டன. ஒரு விசித்திரமான, இது வரை நாங்கள் கண்டிராத ஒரு பறவை அதிகாலையே எங்கள் சன்னலில் வந்தமர்ந்து விடாது ஒலிக்கிறது. அவ்வளவு அழகான விடுதலைக்குரல். உலகின் வெவ்வேறு அரசியல் புள்ளிகளுக்கு இடையே...

Continue Reading...

தமிழ் மருத்துவம்


சமூகத்தின் பொறுப்பான இடங்களில் பதவிகளில் இருப்பவர்கள் கூட, இந்த நெருக்கடியான காலகட்டத்தை வாய்ப்பாகக் கொண்டு, தமிழ் மருத்துவம், மரபு மருத்துவம், மாற்று மருத்துவம் குறித்து மோசமான இழிவான பதிவுகளை இடுகிறார்கள்.

ஒன்று, நூற்றுக்கணக்கான தமிழ் மருத்துவ நூல்களில் ஒன்றைக் கூட இவர்கள் வாசித்து இருக்கமாட்டார்கள்.
இரண்டு, சமூகத்தில் மாற்று மருத்துவம் என்ற பெயரில் ஓங்கிய கருத்துகளைப் பேசுபவர்களையும், பொத்தாம் பொதுவான கருத்துகளை முன்வைப்பவர்களையும் இந்தத் தமிழ் மருத்துவத்துடன் இணைத்து எல்லோரையும் பொதுமைப்படுத்தும் மந்தை மனநிலை.
மூன்று, ஆங்கில...

Continue Reading...

கொரோனா காலத்தின் சென்னை


சென்னை ஒரு மாய நகரம். தினம் தினம் தன் உருமாற்றும் நகரம். சென்னைக்கு விசித்திரமான நிறைய பண்புகள் உண்டு. உங்கள் வாழ்க்கையையே ஓர் அரிய நிகழ்வால் புரட்டிப் போட்டுவிடும். உங்களின் வியப்பான, திகைப்பான மறுபக்கத்தை உங்களுக்குகே காட்டிவிடும். சமீபத்தில் ஓர் இளம்பெண் சொன்னார், ‘நான் இப்படியான ஓர் ஆளுமையாவேன் என்று நினைத்தக் கூடப் பார்த்ததில்லை. சென்னை தான் இதைச் சாத்தியப்படுத்தியது. எங்கள் ஊரில் என்றால் ஒரு திருமணத்துடன் என் வாழ்க்கை முடிந்து போயிருக்கும்’, என்று.

சென்னை கடற்கரையும் கடலும் பிரமாண்டமான அடையாளங்கள். இங்கே எல்லா சாலைகளும் எனக்கு...

Continue Reading...

நீளமான காலம்


காலம் கொஞ்சம் நீளமாகியிருக்கிறது. இல்லை, நாம் அதை நீட்சியடையச் செய்திருக்கிறோம், தீநுண்மியால். இப்பொழுது நம் கையில் நாள் கணக்குத் தெரியாத காலம். எல்லாவற்றையும் எதையும் மெல்ல செய்யமுடியுமாவென்று பார்க்கிறேன். அதிகாலையில், செந்தில்குமார் நடராஜனின் ஒரு கதையை வாசித்தேன். ஒரு பித்த நிலையில் புனைவில் இயங்கிக்கொண்டிருக்கிறார். கவிதைகளையும் கதைகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து மென்று விழுங்கத் தரும் அனுபவம் எங்களிடையே உண்டு. அதைத்தாண்டி, அதே உற்சாகத்தில் பாப்லோ நெரூதாவின் ஒரு கவிதையை மொழியாக்கம் செய்தேன். அச்சு அசல் இந்த கொரோனா தருணத்திற்காகவே...

Continue Reading...

மரணதண்டனை நீதியே


மரணதண்டனை நீதியே அன்று. அது இன்னும் அதிகமான கொடுங்குற்றம்!

மரண தண்டனை, பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்குத் தீர்வு இல்லை என்று பலவாறாகப் போராடியாயிற்று. இது, குற்றத்தை ஒரு பொழுதும் தீர்க்காது என்றும் பேசியாயிற்று. உண்மையில், குற்றவாளி என்ன மனநிலையில் செயல்பட்டாரோ அதே நிலைக்குச் சென்று பழிவாங்கும் குணம் கொண்டு நியாயம் பாராட்டுவது தான் மரண தண்டனை. இந்தியத் திருநாட்டில், மரணதண்டனை என்பது ஏன் நீதியன்று என்று, அதுவும் ஒரு குற்றம், இன்னும் சொல்லப்போனால், பாலியல் வன்முறைக்கு நிகரான குற்றம் என்று தான் நாம் கருதவேண்டும்.
பல மேடைகளில்,...

Continue Reading...

கொரோனாவும் மருத்துவமும்


இம்மாதிரியான பெருங்கொள்ளை நோய் என்றால் எனக்கு நினைவிற்கு வருவது, ஆபிரகாம் பண்டிதர் செய்த மருத்துவப்பணி தான். ‘கருணாமிர்தசாகரம்’, என்ற இசைத்தமிழ் நூலை எழுதியது மட்டுமேயன்று அவர் சாதனை. இன்னும் வியக்கத்தக்கதொரு பக்கம் அவருக்குண்டு. சுருளிமலை கருணானந்தர் வழியாக கொடும் பிணிகளை நீக்கும் மருத்துவ முறைகளை அவர் கற்று அறிந்திருந்தார். 1900 - களில் தஞ்சையில் கருணானந்தர் சஞ்சீவி மருந்து நிலையம் ஒன்றையும் நடத்திவந்தார். அவர் தயாரித்துக்கொடுத்த மருந்துகளில் பெரும்பாலானவை, சஞ்சீவி மருந்துகள் தாம். சஞ்சீவி என்றால் உயிர்காக்கும் மருந்து. அன்றும் இதே போல...

Continue Reading...

கொள்ளை நோய்ப்படைப்புகள்


மார்க்வஸ் எழுதிய லவ் இன் த டைம் ஆஃப் காலரா  அதாவது, காலரா காலத்தின் காதல் என்ற நாவலும், ஆல்பர்ட் காம்யூ எழுதிய த ப்ளேக் என்ற நாவலும் கொள்ளை நோய் பற்றிய புனைவுகள். மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றவை. இதில் காம்யூவின் நாவல் கொள்ளை நோய்க்காலத்தில் உறவுகளின் விரிசலையும், ஏக்கத்தையும், தனிமைப்படுதலையும் விரிவாகப்பதிவு செய்தது. இந்தக் கொரோனா காலம், பெருங்கொள்ளை நோய்க்காலமாகிறது. கொரோனா பற்றி நிறைய அறிந்துகொள்கிறோம். நாமே தேடிச் செல்லவில்லையென்றாலும் கொரோனோ பற்றிய தகவல்கள் நம்மைத் தேடிவந்து சூழ்கின்றன.  நாமே விரும்பாமலும் ஒரு புனைவின் வெளிக்குள்...

Continue Reading...

இளமதி - செல்வன்


இளமதி - செல்வனுக்கும், திவ்யா-இளவரசனுக்கும் அன்றே கவிஞன் பிரமிள் எழுதிவிட்டான், "உயர் ஜாதிக்காரி ஒருத்தி நகத்தோடு என் பறை நகம் மோதி", என்று!

பிரமிளின் 'கலப்பு' எனும் கவிதை

1. கண்கள்

உயர் ஜாதிக்காரி
ஒருத்தி நகத்தோடு
என் பறை நகம் மோதி
மனம் அதிர்ந்தது.

கோபத்தில் மோதி
கலந்தன கண்கள்

பிறந்தது ஒரு
புதுமின்னல்

ஜாதியின்
கோடை மேவிப் பொழிந்தது
கருவூர்ப்புயல்…

(1972)

2. புகைகள்

உயர் ஜாதிக்காரி
ஒருத்தி நகத்தோடு
என் பறை நகம் மோதி
ஊர் அதிர்ந்தது.

ஐயாயிர வருஷத்து
இரவு சிவந்து
எரிந்தது என் சேரி -

புகைகள்...

Continue Reading...

கொரோனா வைரஸ்


வைரசுக்கு நிகர் வைரஸ் தான். பாக்டீரியாக்களைப் போன்று அவ்வளவு எளிதாக வைரஸ்களைக் கொன்றுவிட முடியாது. அவற்றின் மாதிரியால் தான் வைரசுகளைப் பொதுவாகக் கொன்றழிப்பது. மனித இன வரலாற்றில் காலந்தோறும் நிறைய வைரசுகள் தோன்றிப் புகழ்பெற்றிருக்கின்றன, மனித இனத்தை மிரட்டியிருக்கின்றன. ஹெச் ஐ வி போல. உயிரிகளில் ஓர் உருவகம் போன்றது தான் வைரஸ். ஓர் உயிருக்குள் சென்று தன் பல பிரதிகளை உருவாக்கிக்கொள்ளும் வீர்யம் கொண்டது. தன்னந்தனியான ஓர் உயிரியாகத்தான் செயல்பட முடியாதே தவிர ஓர் உயிர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டால், தன் இனம்பெருக்கி வாழ எல்லா வாய்ப்பையும்...

Continue Reading...

OLD PATH WHITE CLOUDS


ரிஷிகா, OLD PATH WHITE CLOUDS வாசிக்கத் தொடங்கியிருக்கிறார். புத்தர் தொடர்பான பல நூல்களை அவர் வாசித்திருக்கும் நிலையில், இந்த நூலை அவருக்குப் பரிந்துரைத்தேன். பதினொரு வயது ரிஷிகாவின் வாசிப்பு வேகம் அதிகமாகி, என்னால் அவருக்கு நூல்களைப் போதுமான அளவிற்கு வழங்க முடியாத நிலையில் இந்த நூலைக் கொடுத்தேன். 


கொஞ்சம் மெதுவாக வாசிப்பதற்கு இந்த நூல் ஏற்ற நூலாகும். ஒவ்வோர் அத்தியாயமும் நிறைய விடயங்களைச் சொல்வதால் ஒரு நாள் ஓர் அத்தியாயம் என்று வாசிக்கத் தொடங்கியிருப்பதாகச் சொன்னதும், மகிழ்ச்சி அடைந்தேன், கொஞ்சம் ஓய்வானேன். இனி அவர் இந்த நூலை வாசித்து முடிக்கும்...

Continue Reading...

புலியும் புலி போலாகிய புலியும்


“புலியும் புலி போலாகிய புலியும்”, கவிதைத்தொகுப்பு தயாராகிவிட்டது. இந்த ஆண்டில் என்னுடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. முதல் கவிதைத் தொகுப்பு, 'மீண்டும் கண்டெடுக்கப்படும்'. இதுவும் புத்தகக்காட்சியின்போது கிடைக்கும். “புலியும் புலி போலாகிய புலியும்” - பரிசோதனை முறையிலும் வடிவிலும் இப்படியான தொகுப்பைக் கொண்டுவரவேண்டுமென்று நெடுநாளாக எண்ணியிருந்தேன். இந்த முறை சாத்தியமாகிறது.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அச்சடிக்கும் எண்ணமும் இருக்கிறது. நூல் வெளிவந்ததும் அறிவிக்கிறேன். ஏனோ அக்கவிதைகளை முகநூலில் வெளியிடவோ, பரவலாக விளம்பரம் செய்து...

Continue Reading...

திருவனந்தபுரத்தில் நிகழ்ந்த Kazhcha திரைப்படவிழா!


திடீரென்று தான் அழைத்தார்கள், KAZHCHA திரைப்படவிழாவில் கலந்து கொள்ள. திரைப்படங்களைப் பார்வையாளர்களுடன் சேர்ந்து பார்த்துத் தரமிடும் குழுவில் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டார்கள். நான்கு நாட்கள், பன்னிரெண்டு படங்கள். ஏற்கெனவே, அனுப்பப்பட்டிருந்த முப்பது படங்களில் இருந்து பன்னிரெண்டு படங்களைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்கள், இயக்குநர்கள் சணல் குமார் சசிதரனும், ஜிஜு ஆண்டனியும் உள்ளிட்ட குழு. சவாலான பணி. ஏற்கெனவே இளம் வயதிலிருந்தே ஒரு நாளுக்கு ஐந்து திரைப்படங்கள் பார்த்த வழக்கம் உண்டு என்றாலும், அரங்கில் தொடர்ந்து திரைப்படங்கள் பார்க்கும்...

Continue Reading...

இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு


"குண்டு", படம் இன்று வெளிவருகிறது. இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் நீலம் புரொடக்‌ஷன்சின் இரண்டாம் படைப்பு. வாழ்வியலையும் சமூகத்தையும் இணைக்கும் கதையுடனும் திரைக்கதையுடனும் வந்திருக்கிறார்கள். அசாதாரணமான ஓர் இணைப்பு இது. பொதுவாக, தீவிரவாதத்தையும் போரையும் அணு ஆயுதங்களையும் சொல்ல கதையை வலிந்து சமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் வணிக சினிமாவில், கடலின் கரையொதுங்கும் ஒரு குண்டு கதையின் பிறப்பிடமாகிறது. சூழலியல் மீது, வளர் இளம் தலைமுறைகள் மீதும் அக்கறை கொள்ளும் கதையும்.

நம் நிலங்களில் ஒலிக்கும் மரபார்ந்த சத்தங்களுடன் இசையுடன்...

Continue Reading...

ஏன் பிரியங்கா வன்புணர்வுக் கொலைக்கு உள்ளானார்?


மருத்துவர் பிரியங்கா வன்புணர்வுக் கொலையும்
சமூகத்தின் மந்தை மனநிலையும்!

‘ஜல்லிக்கட்டு’, என்ற மலையாளத் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு நண்பர் ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருக்கும்போது சொன்னேன், ‘மனிதன் தனியாக இருக்கும்போது கூட அவனுடைய நல்ல தன்மைகளைத் தொடர முடிபவனாக இருப்பான். ஆனால், நான்கு பேருடன் சேர்ந்து ஒரு மந்தையாகிவிட்டால், குழுவாகிவிட்டால் போதும் எல்லா மிருகத்தனங்களும் வெளிப்பட்டுவிடும்’, என்று.

ஜல்லிக்கட்டு படத்தில், எருமையைத் தேடிச் செல்லும் கூட்டம் ஒரு கட்டத்தில் தம் அடிமன விடயங்கள் எல்லாம் வெடித்துக் கிளம்ப ஒரு...

Continue Reading...

என்னென்ன எழுதியிருக்கிறேன்?


 

நான் எனக்காகச் செய்துகொள்ளும் செயல் நூல்கள் எழுதுவது மட்டுமே என்ற நம்பிக்கை. இதுவரை, எழுதியுள்ள பன்னிரண்டு கவிதைத் தொகுப்புகளும்  அதாவது, பூனையைப் போல அலையும் வெளிச்சம், முலைகள், தனிமையின் ஆயிரம் இறக்கைகள், உடலின் கதவு, யானுமிட்ட தீ, மாமத யானை, இடிந்த கரை, காலவேக மதயானை, அகவன் மகள், ஹீராக்ளீட்டஸின் நதி, அகமுகம்,  மூவா மருந்து ஆகிய நூல்கள் அனைத்தும் மொத்தமாக, இரண்டு தொகுதிகளாக Zero Degree Publishing வெளியீடாக, “குட்டி ரேவதி கவிதைகளாக”, வெளிவருகின்றன.

சிறுகதைகள் எழுதும் போது இரத்தச்சுத்திகரிப்பு போன்ற அனுபவம் நிகழ்வதால் தொடர்ந்து சிறுகதைகள் எழுதிக்...

Continue Reading...

About ME

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book.

Get In Touch

Address: 262 Milacina Mrest.

Phone: +91 3333 6789.

Tax: +91 3333 6789.

Email: support@kr.com

Website: www.kr.com