அரசியல் சிறைவாசிகளை விடுதலை செய்!

அரசியல் சிறைவாசிகளை விடுதலை செய்!

08 Apr 20
Article


தமிழக அரசே,

கரோனா 19-என்ற தொற்றுநோய் நாடு முழுவதும் பொது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் தீவிரமாக பரவி, 21 நாட்கள் முழுஅடைப்பு என அரசாங்கம் அறிவிக்கின்ற சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய சூழலில் நாடு முழுவதும் சிறைகளில் அதிக கூட்டமாக சிறைவாசிகள் நிறைந்து கிடப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விசயமாக உள்ளது. இந்திய நீதித்துறை அறிக்கை 2019ன் படி சிறையில் தங்கும் சிறைவாசிகளின் சராசரி எண்ணிக்கை 114 சதவீதமாக உள்ளது. சராசரியான எண்ணிக்கை இவ்வாறு இருப்பினும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இது வெவ்வேறானதாக இருக்கிறது.

சாதாரணமாகவே சிறை போன்ற அடைக்கப்பட்ட சூழலில் கரோனா போன்ற தொற்று நோய்களினால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுகிறது. கூட்டம் அதிகமாக அடைக்கப்படும் போது நிலைமை மேலும் தீவிரமாகிறது. எனவே, இது குறித்து அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்திய நீதித்துறை அறிக்கை 2019ல் சிறைவாசிகளில் 67% விட அதிகமானவர்கள் விசாரணை ஏதும் இன்றி கிடக்கும் விசாரணைக் கைதிகள். அதாவது, புலனாய்வு, விசாரணை, நீதித்துறை விசாரணை என எதிர்பார்த்து சிறையில் காத்திருப்பவர்கள்.

இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த உச்ச நீதிமன்றம், அதிக பட்சமாக 7 ஆண்டுகளுக்குள் தண்டனை பெறத்தக்க வழக்குகளில் சிறைப்படுத்தப்பட்ட சிறைவாசிகளை பிணையில் விடுவிப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என மாநில அரசாங்கங்களுக்கு ஆணையிட்டது. இந்த விடயத்தை கையாள்வதற்கு மாநில அரசாங்கம் ஒரு உயர்மட்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. தண்டனை பெற்ற சிறைவாசிகளையும், விசாரணைக் கைதிகளையும் உடல் ஆரோக்கிய பிரச்னையை கருத்தில் கொண்டு பிணையிலோ, நீண்ட நாள் பரோலிலோ விடுவிப்பது குறித்து இக்குழு பரிசீலனை செய்ய வேண்டும் என பரிந்துரைத்தது. உச்சநீதிமன்ற பரிந்துரையை அதன் உள்ளார்ந்த பொருளிலும் உணர்விலும் ஏற்று, சிறையில் காணும் மனிதாபிமான சிக்கலை தீர்க்க மத்திய, மாநில அரசாங்கங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். உலகம் முழுவதும் இந்த தொற்றுநோய் பிரச்சினையை ஒட்டி சிறைவாசிகள், அரசியல் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டுள்ள பல உதாரணங்கள் இருப்பதை நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

நாடு முழுவதும் பெரும் அளவிலான அரசியல் சிறைவாசிகள் பல ஆண்டுகளாக விசாரணையின்றி அல்லது தண்டனை பெற்ற குற்றவாளிகளாக அடைக்கப்பட்டு கிடக்கின்றனர். பலர் நீதித்துறை விசாரணையின்றி 5 ஆண்டுகளுக்கு மேல் சிறைப்பட்டுள்ளனர். சிலர் ஏற்கனவே நோய்வாய்பட்டு அவதியுற்று வருகின்றனர்.உதாரணத்திற்கு குறிப்பிட வேண்டும் எனில், தில்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாய் பாபா, கவிஞர் வர வர ராவ், பேராசிரியர் ஷோமா சென், சுதா பரத்வாஜ் மேலும் பல வயதில் மூத்தவர்கள் சிறையில் நோய்வாய்பட்டு அவதியுறுகின்றனர்.

தமிழகத்தில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏழு தமிழர்கள் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். இவர்களில் பேரறிவாளன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு நீரிழிவும் உயர் ரத்த அழுத்தமும் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இவ்வழக்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஏழு பேரின் பெற்றோர்களும் மிகவும் முதியவர்கள் ஆவர். அதேபோல பல முஸ்லிம் சிறைவாசிகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் பல நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பதோடு, நீண்ட காலம் சிறையில் இருப்பதால் இவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் கூட மிகவும் குறைவாக இருக்கவே வாய்ப்புள்ளது. .

சுந்தரமூர்த்தி என்ற மாவோயிஸ்டு சிறைவாசி 11 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். இன்னும் பல மாவோயிஸ்ட் சிறைவாசிகளும் ரிலையன்ஸ் வெடிகுண்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட தமிழ்தேசிய செயற்பாட்டாளர்கள் 6 பேரும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வருகின்றனர். ஏற்கனவே பல ஆண்டுகள் சிறை வாசம் செய்த தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த தோழர்களும் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 60 வயதையும் தாண்டிவிட்ட தோழர் கலா மற்றும் மகாலிங்கம் ஆகியோரும், 70 வயதை கடந்துவிட்ட தோழர் வீரமணி என்பவரும் பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதில் தோழர் வீரமணி அனைத்து வழக்குகளிலும் பிணை கிடைத்துவிட்ட பிறகும், சொத்து மதிப்பு கொண்ட இரத்த உறவினர் வேண்டும் என்ற நிபந்தனை காரணமாக சிறையிலிருந்து வெளிவர முடியாமல் உள்ளார். தோழர் பத்மா இருதய நோய் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். விசாரணையில் உள்ள அரசியல் சிறைவாசிகள் பலர், பல்வேறு வழக்குகளில் பிணை கிடைத்த பின்பும் அல்லது குற்றமற்றவர் என நிருபணம் ஆன பின்னரும் வேறு சில வழக்குகளில் பிணை கிடைக்கப் பெறாமல் சிறையில் கிடக்கின்றனர்.

நாட்டிலுள்ள பல சிறைகளில் சரியான மருத்துவமனைகளோ, தேவைக்கேற்ற மருத்துவர்களோ, மருத்துவ சேவைக்கான வசதியோ இல்லை. அவசர சிகிச்சை தேவைப்படும்போது, வெளியில் உள்ள, ஏற்கனவே அதீத பணிச்சுமையால் திணறிக்கொண்டிருக்கும் பொது மருத்துவமனைகளையே நாட வேண்டியுள்ளது. பல நிர்வாக வழிமுறைகளின் காரணமாக ஏற்படும் தாமதத்தினால் பெரும்பாலான சிறைவாசிகள் தேவையான மருத்துவ வசதி கிடைக்கப் பெறாமல் உள்ளனர். தற்போதைய சூழலில் பொது மருத்துவமனைகளே கரோனா தொற்று நோயின் காரணமாக பெரிதும் நெருக்கடிக்குள்ளாகும் நிலையில் சிறைவாசிகளின் நிலைமை மேலும் மோசமானதாகி விடும். சிறைகளில் இதற்கேற்றாற் போல் வசதிகள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என நமக்கு ஏதும் தெரியவில்லை.

மேற்குறிப்பிட்ட சூழலில் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு ஏறத்தாழ 1180 விசாரணை சிறைவாசிகளை விடுவித்துள்ளது. இருப்பினும் பலர் இன்னும் சிறையில் ஆபத்தை எதிர்நோக்கி அச்சத்தில் காலம் கழித்து வருகின்றனர். முக்கியமாக அரசியல் சிறைவாசிகளை விடுவிக்க தமிழக அரசு மறுத்து வருகிறது. இது இன்றைய சூழலில் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விஷயம் ஆகும். எனவே, தமிழக அரசாங்கம் முன்னுரிமை அளித்து அரசியல் சிறைவாசிகளையும் மற்றும் பிற சிறைவாசிகளையும் பிணையிலோ அல்லது நீண்டகால பரோலிலோ விடுவிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

பேராசிரியர் கோச்சடை
சமூக செயல்பாட்டாளர்

பேராசிரியர் சிவக்குமார்
சமூக செயல்பாட்டாளர்

கொளத்தூர் மணி
திராவிடர் விடுதலைக் கழகம்

பேராசிரியர் அ. மார்க்ஸ்
மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு

தியாகு
தமிழ் தேசிய விடுதலை இயக்கம்

அரங்க குணசேகரன்
தமிழக மக்கள் புரட்சி கழகம்

க.சங்கரசுப்பு
மூத்த வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றம்

கண. குறிஞ்சி
தமிழ்நாடு மக்கள் மன்றம்

பேராசிரியர் சரஸ்வதி
சமூக செயல்பாட்டாளர்

பொன். சந்திரன்
சமூக செயல்பாட்டாளர்

பவானி பா மோகன்
வழக்கறிஞர், மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு

பேராசிரியர் கருணானந்தம்
CPDR-TN

பேராசிரியர் திருமாவளவன்
சமூக செயல்பாட்டாளர்

பேராசிரியர் முரளி
மக்கள் சிவில் உரிமைக் கழகம்

வழக்கறிஞர் பானுமதி
தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர் சங்கம்

கோபால்
CPDR-TN

மீ.த. பாண்டியன்
தமிழ் தேச மக்கள் முன்னணி

ஜெரினா ஜமால்
வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா

பா. ஜீவசுந்தரி
எழுத்தாளர்

விவேக்
மாவோயிஸ்ட் அரசியல் சிறைவாசிகள் விடுதலைக்கான குழு

தமிழ்நேயன்
தமிழ்தேச மக்கள் கட்சி

கோபி நயினார்
திரைப்பட இயக்குனர்

ஜெயராமச்சந்திரன்
வழக்கறிஞர்,
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.

அமீர்
திரைப்பட இயக்குனர்

வழக்கறிஞர் முருகன்
குடியுரிமை பாதுகாப்பு நடுவம் தமிழ்நாடு

வழக்கறிஞர் கேசவன்
சமூக செயல்பாட்டாளர்

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்

வழக்கறிஞர் மில்டன்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்

வழக்கறிஞர் நாகை திருவள்ளுவன்
தமிழ் புலிகள் கட்சி

வ.கீரா
திரைப்பட இயக்குனர்

நாச்சியாள் சுகந்தி
எழுத்தாளர்

சந்திரா
எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்

குட்டி ரேவதி
கவிஞர், திரைப்பட இயக்குனர்

கொற்றவை
எழுத்தாளர்

ஈஸ்வரி
திரைப்பட இயக்குனர்

மு.வி. நந்தினி
பத்திரிக்கையாளர்

செ.பி.முகிலன்
திரைப்பட இணை தயாரிப்பாளர்

கவின்மலர்
பத்திரிக்கையாளர்

அமுதா
சமூக செயல்பாட்டாளர்

சுதா தியாகு
தமிழ் தேசிய விடுதலை இயக்கம்

கவிதா முரளிதரன்
பத்திரிக்கையாளர்

அறிவுக்கரசி
வழக்குரைஞர், பெண்கள் வழக்கறிஞர் சங்கம் சென்னை உயர்நீதிமன்றம்

ஒடியன் லட்சுமணன்
சமூக செயல்பாட்டாளர்

அருள் எழிலன்
பத்திரிகையாளர்

எம்.ஆர்.பாரதி
திரைப்பட இயக்குனர்

பாரதி தம்பி
பத்திரிக்கையாளர்

ராஜா
வழக்கறிஞர், குடியுரிமை பாதுகாப்பு நடுவம் தமிழ்நாடு

சுரேஷ் விஜயராஜன்
மாவோயிஸ்ட் அரசியல் சிறைவாசிகள் விடுதலைக்கான குழு

Write To Author

About ME

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book.

Get In Touch

Address: 262 Milacina Mrest.

Phone: +91 3333 6789.

Tax: +91 3333 6789.

Email: support@kr.com

Website: www.kr.com