Article

ஒரு கவிதை நூலை உருவாக்குவது எப்படி?


இது கவிதை நூல்கள் உருவாகும் காலம். என்னைச்சுற்றிலும் சில கவிஞர்கள் தங்கள் கவிதைகளைத் தொகுப்பதில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு கவிதை நூலைத் தொகுக்கும் போதும் ஓர் ஆழமான மனவெளிக்குள் சென்று வரும் அனுபவம் எனக்குள் நிகழ்வதுண்டு. கவிதைகளைத் தொகுக்கும் போது, எனக்கு நானே சில விதிகளை உண்டாக்கி அவற்றைக் கயிறு போல் பற்றிக்கொண்டு அந்த ஒற்றைப் பாலத்தில் தனியே நடந்து சாகசங்களை நிகழ்த்துவேன். அந்த விதிகள் எல்லாம் எனக்கு நானே  கட்டமைத்துக் கொண்டவை. அவற்றை இங்கே இப்பொழுது பகிர்ந்து கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன்.


என்னுடைய கவிதைத் தொகுப்பு என்பது நான்...

Continue Reading...

யசுனாரி கவபட்டா


யசுனாரி கவபட்டாவை, தூங்கும் அழகிகளின் இல்லம் வழியாக சீனிவாசன் தான் அறிமுகப்படுத்தினார். Snow Country நாவலை இரண்டு ரயில் பயணங்களுக்கிடையே வாசித்து முடித்தேன். இவரது நாவலில் துயர் கொண்ட பெண்களின் மீதான பரிவு முழுமையானது, அழகியல் வடிவம் கொண்டது. கதையின் நிலவெளியும் ஒரு கதாபாத்திரமாகி நம் கற்பனையில் அது பதிந்திருக்க, அந்தக் கதைநிலத்தில்  கதையை வாசித்த படியே நாம தொடர்ந்து பயணிக்க முடியும். Snow Country நாவல், ஒரு Geisha பெண்ணைப் பற்றியது. 


யசுனாரி கவபட்டாவின் எழுத்தில் இரண்டு விடயங்களை உணரமுடியும். நேரடியாகப் புலன்களைத் தொடுகிற நடை. ஆனால், எங்குமே அதன்...

Continue Reading...

குழந்தைகளின் உலகமாய் இல்லை, இது!


பொதுவாக, பெரியவர்களைப் பெரியவர்கள் சொற்களாலோ வன்முறைகளாலோ செயல்களாலோ வதைத்துக் கொண்டால் நான் அதைப் பற்றிப் பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை. பெரியவர்களுக்குப், இதெல்லாம் பொழுது போக்கு. ஆனால், குழந்தைகள் வதையுறும்போது என்னால் தாங்கிக் கொள்ளவே முடிந்ததில்லை. 


அடுத்தடுத்த தலைமுறையினரிடம் நெருக்கமாகப் பழகிவிடும் நான், எந்தத் தலைமுறையிடமும் எளிதாக நெருங்கிவிட முடியும் என்னால் என் தலைமுறையினரிடம் கடும் எச்சரிக்கையுடன் பழக வேண்டியதில் இருக்கும் பாரம் குறித்தே என் தலைமுறையினர் விடுத்து மற்றவர்களிடம் எளிதாகப் பழகிவிடுவேன். அதிலும், இளைய...

Continue Reading...

கால இயந்திரத்தில் ஏறியது போல்


இன்று காலை திருக்குறளின் மூலம் தேடப்போய் மேலோட்டமாக ஒரு முறை வாசித்து விட்டு, அப்படியே சமண சமயம் பற்றியெல்லாம் நூல் நூலாய் வாசித்து தீர்த்தங்கரர், திகம்பரர், சமணர்களின் அறங்கள் குறித்தெல்லாம் ஏறத்தாழ இருநூறு பக்கங்கள் வாசித்திருப்பேன் என்று நினைக்கிறேன். இதை, ஒரு பதிவாக எழுதிப் பகிரும் திட்டம் இருக்கிறது. 

ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பில் படிக்கும் காலத்தில் திருக்குறள் போட்டிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு மாநில அளவில் வென்றிருக்கிறேன். என்னை வகுப்பிலிருந்து போட்டிகளுக்கு அழைத்துச் செல்லவே வாரம் ஒரு திட்டம் போடப்படும். மனனம் என்றால் அப்படி...

Continue Reading...

தற்பொழுதைய வாசிப்பில்


ஆதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் முத்து நாகு எழுதிய ‘சுளுந்தீ’ நாவலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். சித்த மருத்துவ நூல்களுக்கு வெளியே நவீன இலக்கிய வெளியில் முதன் முறையாக, மூலிகைகளின் மருத்துவப் பயன்பாட்டின் செம்மையான விவரணைகளுடன் ஆசிரியர் எழுதியிருக்கிறார். வாசிக்க வாசிக்க பரவசமாக இருக்கிறது. சமூக அரசியல் வரலாற்றைச் சொல்வதினூடே நாவிதர்களின் மரபார்ந்த மருத்துவ அறிவை, நுட்பமான குணபாடங்களைச் சொல்லிச் செல்கிறார். அங்கிங்கென்று இல்லை. நூலில் எங்கெங்கும் விரவிக் கிடக்கின்றது.

ஒரு தோழி, வள்ளலாரை எனக்கு அறிமுகப்படுத்துங்கள் என்று கேட்டுக்...

Continue Reading...

கவிஞர் தேவதேவனின் காதல் நினைவு


கவிஞர் தேவதேவனின் அமுதநதி கவிதைத் தொகுப்பு கையில் சிக்கியது.  அவருடைய 37 - வது தொகுப்பு.  போக, வர அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கவிதைகளை வாசித்துக் கொண்டே இருந்தேன். சிறிய தொகுப்பு தான். என்றாலும் நெடுநாட்களாக வாசித்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு. தென்பட்டது, ‘காதல் நினைவு’, என்ற கவிதை.

காதல் நினைவு

தாகம் கொண்டு 

தண்ணீர் பருக வந்த போதுதான்

அதுவும் தண்ணீருக்குள்ளே தான்

ஆம்பல் மலரைப் பார்த்தது மான்

இதே போன்ற காட்சியை ஒட்டி  பழையதொரு தொகுப்பில் வாசித்த ‘அறுவடை’ கவிதை நினைவிற்கு வந்தது. ஆனால், முற்றிலும் வேறு அர்த்தம்...

Continue Reading...

ஹாருகி முராகாமியின் நாவல்


ஹாருகி முராகாமியின் கதைகள் பிடிக்கவில்லை என்று என் வாழ்க்கையில் இரண்டு  நண்பர்களுடன் சண்டையிட்டுருக்கிறேன். சமீபத்தில், ஒரு வாரத்திற்கு மேல் ஓய்வான காலம் கிடைக்க, முராகாமியின் Killing Commendatore நாவலும் கையில் கிடைக்க, படிக்கலாம் என்று இறங்கினேன். 529 பக்கங்கள்.  2018 - இல் வெளிவந்த நாவல்.

 


மனைவியை விட்டுப் பிரிந்து வந்து தனியாக மலையுச்சியில் நீண்ட மழைக்காலத்தைக் கழிக்கும் ஓர் ஓவியனின் கதை. பின்னணியில், ஜப்பானிய மரபோவியத்தையும் நவீன ஓவியத்தையும்,  புகழ்மிக்க ஓர் ஓவியரைக் கற்பனைக் கதாபாத்திரமாக்கிக் கதையாக்கிக் கொண்டு செல்கிறார். அதே சமயம், மையக்...

Continue Reading...

யாழினிஸ்ரீயின் மேட்டுப்பாளையம்


மேட்டுப்பாளையம் என்றால் யாழினிஸ்ரீயினுடையது என்று தான் நினைவில் தங்கும். அந்த அளவிற்கு முக்கியமான பயணமாகவும் நிகழ்வாகவும் 13.10.19 அமைந்தது. நல்வாய்ப்பாக, இந்த நிகழ்வை நான் மறுக்கவில்லை என்ற எண்ணமும் கூடவே தோன்றியது. கவிஞர் தனசக்தியின் அழைப்பின் பேரில், தொடர் அழுத்தத்தின் பேரில் தான் யாழினிஸ்ரீயின் ‘மரப்பாச்சியின் கனவுகள்’, நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன்.


கவிஞர் யாழினிஸ்ரீக்கு கழுத்துக்குக் கீழே உடல் கல்லாகி உறைந்து போனது போல் இயக்க முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது. வயது முப்பத்தியொன்று. முடக்குவாதத்தைக் கையாளும் மருத்துவ...

Continue Reading...

இந்தியாவிற்கு என்று ஒரே கதை தான் இருக்கிறது!


அசுரனை முன்வைத்து, சினிமாவின் கதைகளை அலசினோம் என்றால் இந்தியாவிற்கு என்று ஒரே ஒரு கதை தான் இருக்கிறது. மீண்டும் மீண்டும் திரைக்கு வெளியேயும் திரைக்கு உள்ளேயும் அதே கதை தான் நிகழ்கிறது. 

அசுரனும் அப்படியான ஒரு கதை தான். உரிமைக்காக எழுச்சியுறும் தன் மகன்களைக் காப்பதற்காகப் பதறிப் பதறி ஓடும் தந்தையோ தாயோ எல்லா காலத்திலும் தோன்றிக்கொண்டே இருக்கின்றனர். சமூக அமைப்புகளின் ஒடுக்குமுறையயும் நன்கு உணர்ந்த தந்தை- தாய் தான். அதன் ஆணி வேர் வரை எல்லாவற்றையும் அறிந்திருப்பவர்கள் தான் என்றாலும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தலையைப் பழி வாங்கும் கதை என்பது...

Continue Reading...

எழுத்து ஓர் உரையாடல்


ஒரு வானொலி ஒலிபரப்பிற்காக அழைத்துசில கேள்விகளைக் கேட்டார்கள். எல்லாமே முக்கியமான கேள்விகள். ஏன் நீங்கள் எழுதத்தொடங்கினீர்கள்? முதன்முதலாக உங்கள் எழுத்து வெளியான போது எப்படி உணர்ந்தீர்கள்? இன்றைய சூழ்நிலையில் எழுத்து என்பது பெருமிதமா, சவாலா? நீங்கள் எழுதுவது, வாசகர்களுக்காகவா, காலத்தின் பதிவாகவா, சமூக மாற்றத்திற்காகவா? நீங்கள் அதிகமும் எதை எழுத விரும்புகிறீர்கள்? இப்படியாக, தனிப்பட்ட சிந்தனைக்கான கேள்விகளாக இருந்தன. 


நான் எழுத வந்தது நோக்கமற்றது. ஆனால், எழுத வந்த பின்பு,  எழுத்தின் முக்கியத்துவம் உணர்வது போல நிறைய சம்பவங்கள் நிகழ்ந்தன....

Continue Reading...

மீளும் நினைவுகள்


சமீபத்தில் எழுதிய கவிதைகளை எல்லாம் கொத்தாக எடுத்து தொகுத்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு தொகுப்புகளை ஒன்றாகச் சேர்த்து ஒரே நூலாகத் தொகுக்கலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. அவற்றை வாசிக்கும்போது தோன்றியது, இது தான்: நான் நாட்குறிப்பு என்று எதுவும் எழுதுவதில்லை. நினைவில் வைத்துக் கொள்ளும் படியாக எதையும் சேமித்தும் வைப்பதில்லை. ஒரு கவிஞருக்கு, எது சிறந்த நினைவுக் குறிப்பாக இருக்க முடியும்.


நாட்குறிப்பில் நம்பிக்கை இல்லை. ஓடிவிடுவது காலம். நினைவுகளும் ஓடிவிடக்கூடியவை. ஆனால், அவற்றின் தடங்கள் மொழியாகவோ, குறியீடாகவோ, உருவகமாகவோ நம்மில் நம்...

Continue Reading...

ஹீராக்ளீட்டஸின் நதி


நீள்கவிதை

இந்த நீள்கவிதை மூன்று ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. “ஹீராக்ளீட்டஸின் நதி” என்ற இந்தக் கவிதையும், “பேரரசியம்” என்ற நீள் கவிதையும் மட்டுமே அடங்கிய தொகுப்பாய், என் பத்தாவது கவிதை நூலைக் கொண்டு வரும் திட்டமிருந்தது. மொத்தத் தொகுப்பு திட்டத்திற்குப் பின் அந்தத் தனித் தொகுப்பு முயற்சி கைவிடப்பட்டது. என்றாலும், “பேரரசியம்”, என்ற நீள் கவிதை ‘புறநடை’ இதழில் வெளியானது.  ஒவ்வொரு மனிதருக்கும் காலக்கோடு மாறுபடும் என்ற கருத்தியல் அடிப்படையில் உருவான கவிதை. அதுமட்டுமன்று, காலத்தின் நீர்மையைத் தன்னளவில் உணர்ந்து வெளிப்படுத்திய...

Continue Reading...

யாழினிஸ்ரீயின் “மரப்பாச்சி கனவுகள்”


யாழினிஸ்ரீயின் கவிதை நூல் வெளீயீட்டு விழாவிற்காக 13.10.19 அன்று நீங்களும் மேட்டுப்பாளையம் வாருங்கள். இந்தக் கவிதை நூலின பின்னணியில் கவிஞர் தனசக்தியின் ஈடுபாடும், படைப்பாளி ஜீவாவின் உழைப்பும் நிரம்ப இருக்கிறது. கவிதைகளை மொத்தமாக வாசித்துமுடித்தேன். ஒரு “மாற்றுத் திறனாளி பெண்ணின் கவிதைகள்”, என்று அடைமொழி கொடுக்க வேண்டிய தேவையில்லை. கவிதை என்பதே ஒரு மாற்றுத் திறன் தான். கவிதையின் வழியாக மனித இனம் தன் எதிர்காலத்திற்கான மொழியைக் கண்டடைந்து கொள்கிறது. மொழியைப் புதுப்பித்துக்கொள்கிறது. அர்த்தங்களை மாற்றுகிறது. நம்பிக்கையின் அத்தனை வாசல்களையும்...

Continue Reading...

About ME

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book.

Get In Touch

Address: 262 Milacina Mrest.

Phone: +91 3333 6789.

Tax: +91 3333 6789.

Email: support@kr.com

Website: www.kr.com