Stories

கட்டு விரியன்


அதிகாலைக் குளிரின் துகிலைக் கிழித்துக் கொண்டு ஒரு கட்டுவிரியன் பாம்பைப் போலவே அந்த நெடுஞ்சாலையில் விறைத்த பாதங்களுடன் இருளனும் அவள் மனைவி காயாம்பூவும் மகன் செவத்தனும் நடந்து கொண்டிருந்தனர். காயாம்பூவின் கையில் ஒயர்கூடையும் அதில் சுருட்டி வைக்கப்பட்ட ஒரு கோணிப்பையும் இருந்தது. இருளன் கையில் ஒரு கடப்பாரையையும் முனை வளைந்திருக்கும் ஒரு கம்பியையும் சுமந்து கொண்டிருந்தான். அவர்கள் நடந்து செல்வதை சாலையைக் கடக்கும் எவரும் கூட உணரமுடியாத அளவிற்கு சத்தம் எழுப்பாமல் சீராக நடந்து கொண்டிருந்தனர். மூவரின் கருத்த நிறமும் அவர்கள் அணிந்திருந்த...

Continue Reading...

காது


(சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் வெளியான சிறுகதை. ஆணவக்கொலை பற்றிய கதை)

வீட்டின் முன்னால் இருக்கும் வாகை மரத்தில் அடைந்திருந்த காகங்கள் கலைய யாரும் எதிர்பாராத காலையில் அம்மா வாசலில் வந்து நின்றாள். வந்தது முதலே ஏதும் பேசாமல் அல்லது குறைந்த அசைவுகளால், வார்த்தைகளில் பதில் அளித்தபடியே உட்கார்ந்திருந்தாள். சேவியரின் அம்மா கொடுத்த புகைப்பட ஆல்பத்தைத் தொட்டுக்கூடப்பார்க்கவில்லை. சேவியரின் அம்மா, 'இவ்வளவு நாள் பிரிந்திருந்த துக்கமா இருக்கும். விடு. சேவியர், போய் நாட்டுக்கோழி வாங்கிட்டு வா. சூப்பும் கறியும் வச்சிருவோம்.' சேவியர் நிழலாய்...

Continue Reading...

மனிதப்பூனை


அந்தப் பூனை குட்டியாக வெளிவந்த சில கணங்களிலேயே அதன் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு மனிதர்களுடன் வாழ்வதற்காக எடுத்து வரப்பட்டது. பிறந்து இன்னொரு பூனையைத் தன் கண்களால் கண்டிராத அதை அவ்வாறு பிரித்து எடுத்து வந்த சிறுமிக்குத் தன் வாழ்வின் தனிமையை நிரப்புவதற்கு அன்று அந்த ஒரு பூனை மட்டுமே தேவையாயிருந்தது. ஆகவே, அந்தப் பூனை கண் திறந்ததும் பார்த்த முதல் பூனையும் ஒரு மனிதர் தான். அது தன்னையொத்த பூனைகள் எல்லாம் அப்படித்தான் இருப்பார்கள் என்று மனிதர்களையே கூர்ந்து கவனித்து வந்தது. மனிதர்கள் போலவே கணிக்க முடியாத உணர்வுத் தளும்பல்களுக்கு...

Continue Reading...

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi