நீயா நானா

நீயா நானா

12 Sep 22
Stories


 

நீயா நானா விவாதம் பரந்த கவனத்தைப் பெற்றுள்ளது.

என்னைப் பொறுத்தவரை, குடும்பம் பற்றிய சமன்பாடுகளில் இங்கே நீயும் இல்லை, நானும் இல்லை.

தொடர்ந்து இருபது ஆண்டுகள் உரையாடி உரையாடிப் பழகியதில், குடும்பத்தின் சுவர்களுக்குள் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை

ஆணியமும் இல்லை, பெண்ணியமும் இல்லை. தட்டையாக இன்னும் எத்தனையோ நாம் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

அதாவது, ஆண் இதையெல்லாம் செய்வாரா, பெண் இதையெல்லாம் செய்வாரா

நுணுகிப் போக நுணுகிப் போக, ஆயிரம் கேள்விகள். என்றாலும், பெண்ணியம் தோல்வியைத் தழுவியுள்ளது.

ஆணியமும் தோல்வியைத் தழுவும். ஏனெனில், இந்தச்சமன்பாடுகள் எல்லாம் சாதியம், மதயியம் ஆகியவற்றைத் தழுவியவை.

ஆணியமும் பெண்ணியமும் சாதிய, மதப்போர்வைகளை விலக்கினால் மட்டுமே நிகழ்பவை என்பவற்றை

ஆணித்தரமாகச் சொல்லமுடியும்.

குடும்பத்திற்குக் குடும்பம் இந்த ஈகுவேஷன்ஸ் மாறி மாறி இயங்கி, அந்தந்தக் குடும்பம் ஏற்கும் சாதிய மேலாண்மைக்கு ஏற்றாற்போல

ஆணுக்கு ஆதாயமாக இருக்கும், இல்லை பெண்ணுக்கு ஆதாயமாக இருக்கும்.

அந்த அப்பா கேட்பது போல் மட்டும் பெண் கல்வி கற்றுவிட்டால், நம் சமூகத்தில் எல்லாம் மாறிவிடுமா என்ன.

சாதியைப் பயில்வோர் சமூக விழிப்புணர்வைப் பெறாதவராக இருக்கையில், நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு எந்த ஏணியால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளாதவரையில்

பெற்ற கல்வியால் யாது பயன்

இந்தச் சாதிய சமூகத்தில் குடும்பச்சட்டகத்திற்குள் என்ன தான் சமூகம் சொல்வது போன்ற “ஆணாகவே” இருந்தாலும்,

ஆண்களின் நிலைமை எவ்வளவு தாழ்வானது என்பதற்கு இந்த நிகழ்வே உதாரணம்.

என்ன தான் கல்வி பெற்றாலும் சமூகத்தை விழிப்பாய்ப் பார்க்கும் கண்கள் இல்லையென்றால், அதுவும் எவ்வளவு அழகற்றது என்பதற்கும் இந்த நிகழ்வே உதாரணம்.

**

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi