Rugged ஆண்

Rugged ஆண்

11 Aug 22
Stories


 

 

 

நான் அறிந்தவரை

ரக்கட் ஆண் பின்னொரு நாள் சாக்லேட் பாய் ஆகிவிடுகிறார்

சாக்லேட் பாயோ அகத்தில் அழுக்காய் இருக்கிறார்

கரடு முரடு நன்றா மென்மைத் தன்மை நன்றா

அடையாளத்தில் நன்மை இல்லை

வெள்ளையரும் பொய் கறுப்பரும் பொய்

நீதிமான் வெங்காயமாய் இருக்கிறார்

வெங்காயம் இன்னொரு நாளில் போராளியாகிவிடுகிறார்

மனிதருக்காய் ஈகை செய்கிறார்

சாக்லேட் பாய் அகவெறுப்புடன் வாழ்கிறார்

ஒருவர் தாடியும் மீசையும் மழித்து நங்கை ஆகிவிடுகிறார்

தன் மெய்மை அறிகிறார்

எல்லோரும் அகமும் புறமும் வேறு வேறாய் இருக்கிறார்

அடையாள அழிப்பு கால இயந்திரத்தின் ஓயாதவேலை

இதே பணியே பெண்களுக்கும்

பாணியும் இதே

பெண்களிலும் ரக்கட் வுமன் போற்றுதலுக்குரியோர் என்றோ

அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு சமூகத்திற்காகாதென்றோ

குறளில்லை 

அடையாளம் எல்லாம் வாஷிங் மெஷினில் சலவைக்குப் போய்

வெகு காலமாகிறது.

அவரவருக்கே அடையாளம் தெரியா

காலக்கண்ணாடியைக் கைக்குள் அடக்கிக்கொண்டார்

மனிதராவார்

**

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi