‘சாத்தானின் செய்யுள்கள்”, எழுதிய சல்மான் ருஷ்டி, நியூயார்க்கில் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். ஓர் எழுத்தாளர் தன் எழுத்துக்களுக்காகக் குத்தப்பட்டிருக்கிறார் என்றால் எழுத்து என்பது எத்தகைய ஆயுதம் பாருங்கள்.
நம் உலகில் சக எழுத்தாளர்களே பல முறை எழுத்தைக் கத்தியாக உபயோகப்படுத்துவதும், கத்தியை எழுத்தாகப் பயன்படுத்துவதும் வழக்கம் தான்.
எழுத்தாளன் மீது கத்தியெறிதல் என்பது நவீன வாழ்விலும் தொடர்வது.
என்றாலும் சல்மான் ருஷ்டியின் வாழ்க்கையில் கத்தி என்பது படிமமாகவே இருக்கிறது என்று சொல்லவேண்டும். வன்மத்தையெல்லாம் கத்தியாக்கி சாத்தானின் செய்யுள்களை மொழிபெயர்த்தோர் கூடக் குத்திக்கொல்லப்பட்டிருக்கின்றனர்.
மதம், மதமேறியது!
.jpg)
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi