நீண்ட காத்திருப்பு - லேவ் தல்ஸ்தோய்

நீண்ட காத்திருப்பு - லேவ் தல்ஸ்தோய்

21 Sep 22
Stories


 

 

 

அங்கொன்றும் இங்கொன்றுமாய் தினமும் ஏதேனும் ஒரு சிறுகதையை வாசித்துவிடுவேன். சிறுகதை வாசிப்பது நொறுக்குத் தீனி உண்பது போல.

ஆங்கிலத்தில், மொழியாக்கத்தில், தமிழில் என ஏதோ ஒரு வகையில் வாசித்துவிடுகிறேன். ஆழமான சிறுகதை என்றால் நீண்ட நேரத்திற்கு அடுத்த நாள்

வரையிலும் கூட மனதின் அடியில் உழன்று கொண்டே இருக்கும். நம் அன்றாட வாழ்வின் உணர்வுகளிலிருந்து மாறுபட்ட புதிய உணர்வுகள் இருப்பதும் ஒரு காரணம்.

 

போர்ஹே அந்த வகையில் எப்பொழுது என்றாலும் சிறுகதை கட்டமைப்பை உணர்த்தக்கூடியவர். தமிழில் சிறுகதைக்கு நீண்ட காவிய மரபு உண்டு.

புதியதாக எழுத வந்து சிறந்த சிறுகதைகளைத் தங்கள் முதல் பத்து கதைகளிலேயே நிறுவியர் கூட உண்டு. அப்படியே இணையம் இணையமாக மேய்ந்ததில் ஜான்சி ராணி மொழிபெயர்த்திருந்த லேவ் தால்ஸ்தோயின் நீண்ட காத்திருப்பு கதையை வாசிக்கத் தொடங்கினேன். Shawshank Redemption படத்திற்கு இணையான அனுபவத்தை வாசிப்பிலேயே உணரமுடிந்தது.

 

புனைவின் வடிவில் என்ன தான் சிறந்தவர்கள் நம்மவர்கள் என்றாலும் மூலக்கருத்தின் அரசியலில் கோட்டைவிட்டுவிடுவார்கள். மாநில எல்லையையோ தாண்டினாலே கதைக்கு உலக நோக்கு இல்லாததை எவரும் உணர்ந்தகொள்ளமுடியும். கதை என்றால் எந்த மொழியில் எந்த மூலையில் இருப்பவர் வாசித்தாலும் தன்னுடைய வாழ்வினுடன் இணைத்துப் பொருத்திப்பார்க்கும் வாய்ப்பு இருக்கவேண்டும்.

கதைக்கான சுட்டி இதோ: https://tamizhini.in/2020/11/18/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D/

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi