மழையின் நதி

மழையின் நதி

30 Sep 19
Poems


நான் மழையின் வீழ்ச்சி
நீ நதியின் ஈர்ப்பு
உள்ளிழுத்துப் புணரும் வேகம்
செம்புலப்பெயல் நீர்
உடலுக்குள் மீன்களின் பாய்ச்சல்
கொடிப்பாசிகளின் தழுவல்
புரண்டணைக்கும் மூர்க்கத்தில்
சுழன்றோடிப்
பாறைகளின் படுக்கையில்
மூர்ச்சையடையச் செய்கிறாய்
உனது மடி
நான் சுழன்றாடும் சங்கப்பலகை
உனது கைகளின் மென்மையான சருமம்
கழுத்தின் பின்புறம்
கண்களை வருடும்
எதிர்வந்து நீ அழைக்கும் போது
என் கால்களைப் புல் அறுக்கும்

நீ காலத்தின் வேகம்
நான் பருவத்தின் மலர்ச்சி

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi