

இருபது ஆண்டுகளுக்கு முன் அஞ்சலி மாண்டெய்ரோ மற்றும் ஜெய்சங்கர் இருவரும் சேர்ந்து இயக்கிய She Write ஆவணப்படத்திரையிடல், சமீபத்தில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், எலெக்ட்ரானிக் மீடியா துறை வளாகத்தில் அதன் இணை பேராசிரியர் அருள்செல்வன் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ஆர்ஆர் சீனிவாசன்முன்னிலையில் திரையிடப்பட்டது.
மாணவர்கள் பார்த்திருந்து பல கேள்விகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர். இருபது ஆண்டுகளில் பெண் - ஆண் பாலியல் பார்வை வெகுவாகவே மாறியிருக்கிறது. இளைய தலைமுறையினரின் பெண்ணியம் பற்றிய புரிதல, சமூக வளர்ச்சி மற்றும் சமுக வரலாறு குறித்த நல்ல பரிணாம வளர்ச்சியை வெளிப்படுத்துவதாக இருந்தது. நவீனப் பார்வைகளையும் கண்டுணர முடிந்தது. முந்தைய தலைமுறை போல எடுத்த எடுப்பிலேயே பெண் வெறுப்பு சிந்தனைகள் மற்றும் பெண்ணியத்தைக் கேலி செய்யும் பார்வைகள் இளம் தலைமுறையினரிடம் இல்லாததை உணரமுடிந்தது.
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi