வானில் தொங்கும் மேகங்கள்
அந்தரவெளியில் அசைய
எழுத அமர்வேன்
ஜன்னல் கதவைக் காற்று வந்து தட்ட
அதைத் திறக்கும் முன்
காகிதங்களை ஒழுங்கு செய்வேன்
யானையளவு மழை வந்து
ஜன்னலை அடைத்துக் கொள்ள
ஏதும் எழுதாமல்
மழை எப்படி பறவைகளை வருத்தும்
எனக் குமைவேன்
ஓர் ஓவியத்தின் காலடி
காகிதத்தில் பதிந்ததும்
எழுதியது போதுமென எழுவேன்
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi