நதி, ஒரு கடலைச்சேரும் முன் பயத்தில் நடுங்குவதாகச் சொல்லப்படுகிறது.
மலைகளின் சிகரங்களிலிருந்து, நீளமான சுழலும் பாதைகள் வழியாக, காடுகளையும் கிராமங்களையும் கடந்து, தான் பயணித்து வந்த பாதையினை நதி திரும்பிப் பார்க்கிறது.
தன் முன்னால் விரிந்து கிடக்கும் அந்தக் கடலைப் பார்க்கிறது. அதுவும் அந்தக் கடலினில் சேர்வது என்பது அதில் என்றென்றைக்குமாக மறைந்து போவதைத் தவிர வேறொன்றுமில்லை.
ஆனால், வேறு வழியுமில்லை. நதியால் திரும்பிப் போகமுடியாது. யாருமே திரும்பிப் போக முடியாது. திரும்பிப் போவது என்பது வாழ்தலில் சாத்தியமில்லை.
நதி, கடலில் நுழையும் அந்தத் துணிச்சலான முடிவை எடுக்கிறது. ஏனெனில் அப்பொழுது தான் அந்த அச்சம் மறைந்து போகும்.
ஏனெனில், அது கடலில் மறைந்து போவது என்பதில்லை, கடலாகிப் போவது என்பதையும் அப்பொழுது தான் அந்த நதி அறிந்து கொள்ளும்.

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi